×

சில்லி பாயின்ட்…

* உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக அவதிப்படும் ஆஷ்டன் ஏகாருக்கு பதிலாக மார்னஸ் லாபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் டிராவிஸ் ஹெட் காயத்தால் ஓய்வெடுத்து வந்தாலும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது 2 பயிற்சி ஆட்டங்களில் நாளை நெதர்லாந்து அணியுடனும், அக்.3ம் தேதி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.

* தென் ஆப்ரிக்க அணி கேப்டன் தெம்பா பவுமா சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதால், பயிற்சி ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்பி அணியுடன் இணைந்துகொள்வார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுமா இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் நடக்க உள்ள பயிற்சி ஆட்டங்களில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக் இணைந்து தொடக்க வீரர்களாகக் களமிறங்க உள்ளனர்.

* 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறியுள்ளார். 2024 உலக கோப்பை டி20 தொடருடன் சர்வதேச டி20ல் இருந்தும், அதற்கு முன்பாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இலங்கை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா (32 வயது) மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய சிட்னி நீதிமன்றம், அவர் குற்றமற்றவர் என கூறி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இதையடுத்து, தனுஷ்கா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்குவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

* ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணியுடன் இதர இந்தியா அணி மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் அக்.1ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இதர இந்தியா அணியின் கேப்டனாக ஹனுமா விஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

* இதர இந்தியா: ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பரத், மயாங்க் அகர்வால், யஷ் துல், ஷாம்ஸ் முலானி, சாய் சுதர்சன், சர்பராஸ் கான், புல்கிட் நரங், சவுரவ் குமார், யஷ் தயாள், நவ்தீப் சைனி, வித்வத் கவெரப்பா, ஆகாஷ் தீப், ரோகன் கன்னும்மால், துருவ் ஜுரெல்.

* சவுராஷ்டிரா: ஜெய்தேவ் உனத்கட் (கேப்டன்), செதேஷ்வர் புஜாரா, ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வாசவதா, ஹர்விக் தேசாய், தர்மேந்திரசிங் ஜடேஜா, பிரேரக் மன்கட், சிராக் ஜானி, ஜெய் கோஹில், பார்த் பட், விஷ்வராஜ்சிங் ஜடேஜா, சமர்த் வியாஸ், யுவராஜ்சிங் டோடியா, குஷாங் படேல், ஸ்நெல் படேல், தேவங் கரம்தா.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Marnus Labuschagne ,Australia ,World Cup ,Ashton Agar.… ,Dinakaran ,
× RELATED டி.20 உலக கோப்பை தொடர்: 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை வென்ற ஆஸ்திரேலியா