×

உலக கோப்பை இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஷ்வின்

புதுடெல்லி: உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாக அவதிப்படும் ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக நட்சத்திரம் ஆர்.அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். உலக கோபை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இடம் பெற்றிருந்த அக்சர் படேல் ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் அடைந்தார். உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் 15 பேர் அடங்கிய இறுதி அணியை அறிவிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்குப் பிறகு அணியில் மாற்றம் ஏதும் செய்வதாக இருந்தால், உலக கோப்பை தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சர் முழுமையாகக் குணமடைய குறைந்தபட்சம் இன்னும் 3 வாரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்தே அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஆர்.அஷ்வின், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

The post உலக கோப்பை இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஷ்வின் appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Axar ,India ,World Cup ,New Delhi ,Axar Patel ,World Cup ODI ,Dinakaran ,
× RELATED திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ்