×

பைனலில் ராம்குமார் – மைனேனி டென்னிசில் பதக்க வாய்ப்பு உறுதி

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு ராம்குமார் ராமநாதன் – சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியதை அடுத்து, இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளது. அரையிறுதியில் தென் கொரியாவின் ஹாங் சியோங்சான் – க்வோன் சூன்வூ ஜோடியுடன் நேற்று மோதிய ராம்குமார் – மைனேனி இணை 6-1, 6-7 (6-8), 10-0 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் சீன தைபேவின் ஹ்சு யு ஹ்சியோ – ஜங் ஜேசன் ஜோடி 4-6, 7-6 (7-5), 10-2 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் இசரோ ப்ருச்யா – ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னெறியது. இறுதிப் போட்டியில் சீன தைபேவுடன் இந்தியாவின் ராம்குமார் – மைனேனி மோத உள்ளதால், இந்டதியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

The post பைனலில் ராம்குமார் – மைனேனி டென்னிசில் பதக்க வாய்ப்பு உறுதி appeared first on Dinakaran.

Tags : Ramkumar - Maineni ,Ramkumar Ramanathan ,Saket Maineni ,Asian Games ,Dinakaran ,
× RELATED ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஓபன்...