×

நாளை முதல் 2 நாள் நடக்கிறது பாஜ மத்திய தேர்தல் குழு கூட்டம்

புதுடெல்லி: பாஜ மத்திய தேர்தல் குழு கூட்டம் வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தயாரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக களம் இறங்கியுள்ளன.

இதற்கிடையே, 230 தொகுதிகள் உள்ள மத்திய பிரதேசத்தில் 79 வேட்பாளர்கள், 90 தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் 21 வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜ வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாஜ மத்திய தேர்தல் குழுவின் 3வது கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து முதல் முறையாக ஆலோசிக்கப்பட உள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post நாளை முதல் 2 நாள் நடக்கிறது பாஜ மத்திய தேர்தல் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,central election committee ,New Delhi ,Madhya Pradesh, ,Rajasthan ,
× RELATED இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தின்...