×

நாளை முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் 29ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 28ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. 10% மட்டுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் ஒன்றிய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில், நாளை 29ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும். பயணத்தையும். எங்கள் அனைத்து ஆம்னி பேருந்துகளில் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Omney buses ,Chennai ,Omney Bus ,Dinakaran ,
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...