×

சேலத்தில் ஆப்பிள் பழத்தை கொடுத்து 40 சவரனை திருடிய பெண்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கைவரிசை

தருமபுரி: தருமபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் ஆப்பிள் பலத்தை கொடுத்து ஏமாற்றி 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரம்பட்டி பகுதியை சேர்ந்த சிவா சேகர் மற்றும் ஜெயந்தி இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் பணிக்கு சென்ற பின் சிவசேகரின் தயார் மற்றும் அவருடைய உறவினரான முதியவர் ஒருவரும் வீட்டில் இருந்தனர்.

பொது காரில் வந்து இறங்கிய அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தான் ஜெயந்தியின் தோழி என தெரிவித்து அவர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது அங்கிருந்த முதியவர் கிளம்பவே அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த பெண் சிறிது நேரத்தில் ஆப்பிள் பழங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார். ஆப்பிளை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு முதியவர் முக்கியமான சீட்டை விட்டு சென்றதாகவும் அதனை எடுக்கவே மீண்டும் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு எந்த சீட்டு என தெரியவில்லை என்று கூறிய மூதாட்டி அந்த பெண்ணையே வீட்டில் தேடச்சொல்லிவிட்டு ஆப்பிளை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே மூதாட்டி மயக்கம் போடவே பீரோவிலிருந்த 40சவரன் நகை மற்றும் ரூ.15,000 பணத்தை அந்த பெண் திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சேலத்தில் ஆப்பிள் பழத்தை கொடுத்து 40 சவரனை திருடிய பெண்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Salem ,Dharmapuri ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு