×

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்


சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப் படுபவருமான திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த மாதம் (ஆகஸ்ட், 2023) எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகள் சௌமியா சுவாமிநாதன் அவர்களை சந்தித்த போது, அவரின் உடல்நிலையை பற்றி விசாரித்தேன்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார். இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியவர். ‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என்று அடிக்கடி கூறுவார்.இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பல பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.

Tags : M. S.S. ,M. ,S.S. ,Congressmen ,Shuwaminathan ,l. PA ,India ,Chuaminathan ,
× RELATED சென்னைக்கு 210 கி.மீ. தொலைவில் மிக்ஜாம்’ புயல்: வானிலை ஆய்வு மையயம் தகவல்