கோயம்புத்தூரிலுள்ள வன ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணியிடங்கள் விவரம்:
1Multi Tasking Staff (MTS): 3 இடங்கள் (Pwd (LV)-1, PWD (HH)-1, PWD (LD)-1. வயது: 18 முதல் 37க்குள். சம்பளம்: ரூ.18,000/-. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
2Technical Assistant (TA): 3 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2). வயது: 21 முதல் 30க்குள். எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு (Multi Tasking Staff) 10ம் வகுப்பு தகுதி அடிப்படையிலும், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு (Technical Assistant) பணிக்கு பிஎஸ்சி/ டிப்ளமோ இன்ஜினியரிங் கல்வித்தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கட்டணம்: Technical Assistant பணிக்கு எஸ்சி பிரிவினருக்கு ₹750/-, பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு ₹1500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2023.
The post கோவை வன ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் appeared first on Dinakaran.