×

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டிகள் நாளை தொடக்கம்

மும்பை:13வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம்தேதி வரை 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக், அரையிறுதி, பைனல் என மொத்தம் 48 போட்டிகள் நடக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அகமதாபாத்தில் வரும் 5ம்தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முன்னதாக கண்கவர் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள், 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ஜுரம் ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது. உலக கோப்பையில் பங்கேற்கும் 9 வெளிநாட்டு அணிகளும் நேற்றே இந்தியா வந்து சேர்ந்து விட்டன. லீக் சுற்றுக்கு முன் ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி போட்டிகளில் மோதுகின்றன. அதன்படி பயிற்சி போட்டிகள் நாளை தொடங்குகிறது. நாளை 3 பயிற்சி போட்டிகள் நடக்கிறது. இந்தியா வரும் 30ம்தேதி கவுகாத்தியில் இங்கிலாந்து, வரும் 3ம்தேதி திருவனந்தபுரத்தில் நெதர்லாந்துடன் பயிற்சி போட்டியில் மோதுகிறது. பயிற்சி போட்டிகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு

உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்றிரவு 8 மணிக்கு துபாய் வழியாக ஐதராபாத் வந்து சேர்ந்தது. 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த பாகிஸ்தான் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐதராபாத்தில் நாளை நியூசிலாந்து, வரும் 3ம்தேதி ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் மோதும் பாகிஸ்தான் வரும் 6ம்தேதி முதல் போட்டியில் நெதர்லாந்து, 10ம்தேதி இலங்கையுடன் மோதுகிறது. 14ம் தேதி அகமதாபாத்தில் பரமஎதிரி பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

The post ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டிகள் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : ICC World Cup Cricket Training Matches ,Mumbai ,13th ,ICC World Cup Cricket Series ,India ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தின் 2-வது...