×

புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரிய அளவில் மலரும்: தமிழ்நாடு பாஜக மேலிட முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவு

டெல்லி: புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என பாஜக முன்னாள் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வந்த பாஜ தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைப்பு செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக, பாஜ கூட்டணி முறிந்ததாக முறைப்படி அறிவித்தார். தேஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகவும், இனி எந்த காலகட்டத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது எனவும் அதிமுக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, பாஜ கட்சியினர் மாறி, மாறி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுக, பாஜகவினர் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்த நிலையில் புனிதமான திருவள்ளுவர் மண்ணில், தாமரை பெரும் வெற்றி பெறும் என தமிழக பாஜக மேலிட முன்னாள் பெறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரிய அளவில் மலரும்: தமிழ்நாடு பாஜக மேலிட முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvalluvar ,Tamil Nadu ,BJP ,supremo ,CD ,Ravi ,Delhi ,Former ,CD Ravi ,Thiruvalluvar ,AIADMK ,Tamil ,Nadu ,C.D.Ravi ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...