
சென்னை: பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ல் பிறந்தவர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972 முதல் 1979 வரை பதவி வகித்தவர். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராகவும் 1982-ல் இருந்து 1988 வரை எம்.எஸ்.சுவாமிநாதன் பதவி வகித்துள்ளார்.
The post பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்..!! appeared first on Dinakaran.