×

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு; அதனை இபிஎஸ் ஏற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமையும். தேர்தல் வந்தால் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்துவிடும் என கூறுவது நடக்காது என தெரிவித்தார்.

The post 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்: கே.பி.முனுசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : 2024 people election ,K.K. GP ,Munusamy ,Chennai ,Former Minister ,
× RELATED அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை ஓபிஎஸ்...