
- கல்குவாரி
- திண்டுக்கல் நாலகோடா
- மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம்
- திண்டுக்கல்
- ஆர்தர் முகாம் அலுவலகம்
- நாலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
- கல்குவாரி
- திண்டுக்கல் நாலாக்கோட்டை
- தின மலர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் கல்குவாரி அமைப்பதை கண்டித்து ஆட்சியர் முகாம் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். நிலக்கோட்டை அருகே குண்ணுத்துத்பட்டியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புரன்போக்கு நிலத்தில் விவசாயம் செய்தும், குடியிருந்தும் வருகின்றனர்.
இங்கு கல்குவாரி அமைக்க முறையாக ஏழாம் எடுத்த ரவிக்குமார் என்பவர் இங்குள்ள இடத்தை காலிசெய்து தருமாறு குடியிருப்பு வாசிகளை பலமுறை எச்சரித்தார். ஆனால் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளை காலி செய்ய குடியிருப்பு வாசிகள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என முழக்கமிட்டனர்.
The post திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே விளை நிலத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.