×

வாகன போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த பெங்களூரு நகரம்.. தேசிய அளவில் #bangaloretraffic ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது!!

பெங்களூரு : தொடர் விடுமுறை எதிரொலியாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் மெதுவாக ஊர்ந்துச் சென்றனர். மிலாது நபி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு கர்நாடக மாநில பெங்களுருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பான ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு வெளிவட்ட சாலை, வாகனங்களால் திக்குமுக்காடியது.

போக்குவரத்து நெரிசலுக்கு இடையிலும் பெண் ஒருவர் காரில் இருந்தவாறே ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்து வரவழைத்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.பெங்களூரு போக்குவரத்து நெரிசலால் மிக குறைந்த தொலைவை கடப்பதற்கு கூட பல மணி நேரங்கள் ஆனதாக பெங்களூரு டிராபிக் என்ற ஹாஷ் டேக்கில் பொதுமக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

The post வாகன போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த பெங்களூரு நகரம்.. தேசிய அளவில் #bangaloretraffic ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி