×

எஸ்.பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 9 மனு வரபெற்றன உடனடி தீர்வு காண கூடுதல் எஸ்பி உத்தரவு

திருவாரூர், செப். 28: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென அரசு சார்பில் மாவட்ட எஸ்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதைமுன்னிட்டு திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திலும் எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றும் எஸ்பி அலுவலக வளாகத்தில் இந்த சிறப்பு குறைதீர் கூட்டமானது கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து 19 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு போலீசாருக்கு கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன் உத்தரவிட்டார்.

The post எஸ்.பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 9 மனு வரபெற்றன உடனடி தீர்வு காண கூடுதல் எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : B office 9 ,Thiruvarur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே வீரமுத்து நகரில்...