
- கரந்தி முதன்மை சுகாதார நிலையம்
- தஞ்சாவூர்
- கரண்டாய் நகர முதன்மை சுகாதார மையம்
- தஞ்சாவூர் மாநகராட்சி
- கரன்டய்
- முதன்மை சுகாதாரம்
- மையம்
- தின மலர்
தஞ்சாவூர், செப். 28: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைகழுவுதல் செயல்முறை விளக்க சிறப்பு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். இதில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், கொட்டாங்குச்சிகள், டயர்கள் போன்ற பொருட்களை வீட்டைச் சுற்றி போட்டு வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் பயமோ, பதற்றமோ இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. வெளியில் சென்று வந்த பின்னரும், உணவு உண்ணும் முன்பும், பின்பும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செவிலியர்கள் சத்யா, தங்கமாரி, பகுதி சுகாதார செவிலியர் மல்லிகா ஆகியோர் கைகழுவுதல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
The post கரந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைகழுவுதல் செயல் விளக்க பயிற்சி முகாம் appeared first on Dinakaran.