- திருவப்பூர் மாரியம்மன் கோயில்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை திருவப்பூர்
- மாரியம்மன்
- கோவில்
- திருவப்பூர்
- மாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை, செப்.28: புதுக்கோட்டை திருவப்பூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த கோயிலுக்கு தினசரி பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன்கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கோயிலில் 5 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10,82,341 பணம் மற்றும் சில்லரைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை, செப்.28:புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டட மேற்கூரை பெயர்ந்து விழுந்து தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சிதிலமடைந்த பேருந்து நிலைய கட்டடத்தின் ஒரு பகுதி பாதுகாப்பான முறையில் ஜேசிபி மற்றும் ட்ரில்லர் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியுள்ளது, மேலும் புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்ட ரூ.19 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தின் கட்டடங்கள் சிதலமடைந்து மேற்கூரைகள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி இடிந்து விழுந்து வருதால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அச்சத்தோடு நாள்தோறும் அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் சிதிலமடைந்துள்ள பேருந்து நிலைய கட்டங்களை அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள கடையின் முன்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சிதலமடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து பேருந்து நிலையத்தை சுற்றி சுமார் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் தற்போது மேற்கூரை இடிந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யப்பட்டு கட்டடத்தை சுற்றி பாதுகாப்பிற்காக பச்சைத் துணியால் தடுப்புகள் அமைத்து ஜேசிபி டிரில்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு பகுதியாக உள்ள கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்ட தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு பதிலாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சார்லஸ் நகர் பகுதியில் உள்ள இடத்தை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
The post திருவப்பூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.10லட்சம் காணிக்கை appeared first on Dinakaran.