- சோழபுரம்
- கங்ககொண்டா எல்.
- இஏ
- ஜெயங்கொண்டம்
- அரியலூர்
- கங்கா
- கலைஞர் நூற்றாண்டு விழா
- உலக சுற்றுலா தினம்
- கங்ககொண்டா எம்.எல்.
- தின மலர்
ஜெயங்கொண்டம், செப்.28: கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் கல்லூரி மாணவர்களின் சார்பில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன் தலைமையேற்று தூய்மை பணியை தொடங்கி வைத்தார். உதவி சுற்றுலா துறை அலுவலர் சரவணன், மத்திய கலாச்சார சுற்றுலா துறை உதவி இயக்குநர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 100 பேர் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பின்னர் மாணவ, மாணவிகள் கோயிலில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காகிதம் ஆகியவற்றை எடுத்து தூய்மை செய்தனர். நிகழ்ச்சியில், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஆலோசகர் ராஜசேகர் மற்றும் கோயில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post கங்கைகொண்ட சோழபுரத்தில் கல்லூரி மாணவர்களின் தூய்மை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு appeared first on Dinakaran.