×

பயணிகள் எதிர்பார்ப்பு அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம்

திருப்பூர்,செப்.28: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், கூட்ட அழைப்பாளர் மற்றும் மாவட்ட காலநிலை அலுவலரான மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா மற்றும் உறுப்பினர்களான மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மரம் நடுதல், மரகத பூஞ்சோலைகள் அமைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்தல், மீண்டும் மஞ்சப்பை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது மற்றும் செயல் திட்டம் தயாரித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், 2024 முதல் 2029 வரையிலான 5 ஆண்டுகளுக்கு காலநிலை மாற்ற பாதிப்புகளை தணித்தல் மற்றும் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ள செயல் திட்டங்களை உருவாக்குதல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அபிஷேக் குப்தா, வனிதா மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

The post பயணிகள் எதிர்பார்ப்பு அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Passenger Expectation Level Climate Change Action Committee ,Tirupur ,District Climate Change Action Committee ,District Collector ,Passenger Expectation Climate Change Action Committee ,Dinakaran ,
× RELATED பிரதம மந்திரி திட்டத்தில் விவசாயிகள்...