×

தமிழர் மறுவாழ்வு முகாமில் சிறப்பு மருத்துவ முகாம்

தேவகோட்டை, செப்.28: தேவகோட்டை தாழையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயசந்திரன் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அரவிந்த் குமார் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறித்து பரிசோதனை செய்து காசநோய், எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் சண்முகநாதபுரம் மருத்துவ அலுவலர் ஆஷிகா சரஸ்வதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தனி வருவாய் ஆய்வாளர் சண்முகநாதன், கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழர் மறுவாழ்வு முகாமில் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Medical Camp ,Tamil ,Rehabilitation ,Camp ,Devakottai ,Deputy Director ,Vijayachandran ,District Health Services ,Thalayur Sri ,Lankan ,Tamil Rehabilitation Camp ,Medical Camp ,Dinakaran ,
× RELATED சென்னையில் 679 இடங்களில் மழைக்கால...