×

கண்மாய்களை தூர்வார வேண்டும் பரமக்குடி ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்

பரமக்குடி,செப்.28: பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் கருப்பையா வரவேற்றார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து யூனியன் துணைத் தலைவர் சரயுராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்களை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை காலம் வருவதால் மழை நீரை தேக்கி வைக்க ஏதுவாக இருக்கும்.

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 3000 குழந்தைகளுக்கு தினமும் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு அருந்தும் குழந்தைகளுக்கு தேவையான தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் தலா ரூ.48,000 வீதம் 27 சத்துணவு மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

The post கண்மாய்களை தூர்வார வேண்டும் பரமக்குடி ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Paramakudi ,Paramakudi Panchayat ,Union ,Committee ,President ,Chintamani Muthiah ,Deputy Chairman ,Sarayu Rajendran ,Paramakkudi ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்