மதுரை, செப். 28: மதுரை போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்த குறைதீர் முகாமில், 223 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில், மதுரை, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சரகம் வாரியாக, உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதன்படி முகாமில் மொத்தம்318 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில், 223 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 7 மனுக்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தவிர, போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் நேரடியாக, 31 பேர் மனுக்கள் அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட சரக போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
The post போலீஸ் கமிஷனர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம்: 223 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.
