×

மேட்டுப்பாளையத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்,செப்.28: மேட்டுப்பாளையம் யுபிஎல் ரயில்வே கேட் பகுதியில் இருந்து உப்பு பள்ளம் வரை பழுதான சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.பகுதான புழுதி பறக்கும் சாலை குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரீபாபர்வீன் அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகராட்சி கமிஷனர் அமுதா,பொறியாளர் சுகந்தி உள்ளிட்டோர் அச்சாலையை நேரில் ஆய்வு செய்து உடனடியாக தார் சாலையை அமைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து யுபிஎல் ரயில்வே கேட் முதல் உப்பு பள்ளம் வரை தார் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாபர் கூறுகையில்: மேட்டுப்பாளையம் யுபிஎல் ரயில்வே கேட் பகுதியில் இருந்து உப்பு பள்ளம் வரை செல்லும் சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் நகராட்சியின் சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றன.இதில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்தும், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் அடிக்கடி லீக்கேஜ்கள் ஏற்பட்ட காரணத்தால் இச்சாலை போட முடியாமல் இருந்து வந்தது. இதனால் இச்சாலையில் புழுதிப்புயல் கிளம்பி பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி வந்ததோடு,வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக இப்பகுதி பொதுமக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

The post மேட்டுப்பாளையத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,UPL ,Uplu Pallam ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது