×

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அக்.2ல் கிராம சபை கூட்டம்

ஈரோடு, செப்.28: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் போன்றவை அந்தந்த கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்படுகிறது. ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், 2023-2024ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அக்.2ல் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Erode district ,Erode ,Dinakaran ,
× RELATED தன்னிறைவு பெற்ற 64 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: டிச.5ம் தேதி நடக்கிறது