×

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஓராண்டுக்கு முன் ஆசிட் குடித்த திருத்தணி மாணவி பரிதாப மரணம்

சென்னை, செப்.28 : நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆசிட் குடித்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் என்பவரது மகள் ஜெசுதா (எ) ஜெனிபர் (18). இவர் கடந்த, 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட பெற்றோர் ஜெனிபரை திருத்தணி மற்றும் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவர் மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெனிபர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட் குடித்து ஒருவருட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெனிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஓராண்டுக்கு முன் ஆசிட் குடித்த திருத்தணி மாணவி பரிதாப மரணம் appeared first on Dinakaran.

Tags : Rithani ,Chennai ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...