×

திருமழிசையில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ₹16.48 கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள்: கலெக்டர் தலைமையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர், செப்.28: திருமழிசையில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ₹16.48 கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகளை கலெக்டர் தலைமையில் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பட்டேல் தெரு பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ₹16.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பேரூராட்சி தலைவர் வடிவேலு, பேரூர் செயலாளர் முனுசாமி, துணைத் தலைவர் மகாதேவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஷ், ஜீவா சதீஷ், விஜயலட்சுமி வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், இத்திட்டத்தின் மூலமாக குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் பொருட்டில் 6 ஆழ்துளை கிணறுகள், 2 தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டிகள் 8 மோட்டார்கள், 5 ஆயிரம் மீட்டர் அளவிலான பிரதான நீரேற்று குழாய், 4,020 மீட்டர் அளவிலான பிரதான நீர் ஏற்றுக் குழாய், 56 ஆயிரத்து 860 மீட்டர் அளவிலான பகிர்மான குழாய்கள், 3 லட்சம் மற்றும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 1,367 வீடுகளில் உள்ள பழைய குடிநீர் இணைப்புகளை மாற்றம் செய்து புதிய குடிநீர் வீட்டிணைப்புகளுக்கான பணிகள், மேலும் 3,335 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளுக்கான பணிகள் என‌ 8 விதமான குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முழுமை பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படும் என்றார். இதில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (பொ) லதா, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், திமுக நிர்வாகிகள் செல்வம், அருள், எழிலரசன், சுரேந்தர், இளங்கோவன், பார்த்திபன், சதீஷ், வேலு, கங்காதரன், மோகன்ராஜ், நாகராஜ், கோகுல், தாமோதரன், தரணிதரன், ஆனந்தராஜ், ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமழிசையில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ₹16.48 கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள்: கலெக்டர் தலைமையில் அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது