×

பத்தமடை அருகே தெரு விளக்கை உடைத்தவர் கைது

வீரவநல்லூர், செப். 28:பத்தமடை அருகே முத்தம்மாள் தெருவில் உள்ள தெரு விளக்கை உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.பத்தமடை அருகே முத்தம்மாள் தெரு, தங்கப்பன் கோவில் அருகே நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான தெரு விளக்குகளை மர்ம நபர்கள் உடைத்ததாக பத்தமடை பேரூராட்சி செயல் அலுவலர் காதர் பத்தமடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் எஸ்ஐ கண்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தெரு விளக்கை உடைத்து சேதப்படுத்தியது, பத்தமடை சிவானந்தா புதுகாலனியை சேர்ந்த அய்யப்பன்(25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று போலீசார், அய்யப்பனை கைது செய்தனர்.

The post பத்தமடை அருகே தெரு விளக்கை உடைத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Battamadah ,Veeravanallur ,Kisthammal Street ,Dinakaran ,
× RELATED சேரன்மகாதேவியில் தனியார் பள்ளி பேருந்து தீப்பிடித்து நாசம்