×

₹12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், செப்.28: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 600 மூட்ைட பருத்தியை கொண்டு வந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,880 முதல் ₹7,570 வரையும், பி.டி. ரகம் பருத்தி ₹6,010 முதல் ₹7,425 வரையிலும், கொட்டு ரகம் ₹3,260 முதல் ₹5,340 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக 600 மூட்ைட பருத்தி ₹12 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.

The post ₹12 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்