×

இரணியல் அருகே பெயிண்டருக்கு கத்திக்குத்து

திங்கள்சந்தை, செப்.28: இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளை ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (57). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் நுள்ளிவிளையில் உள்ள அப்பாவு என்பவர் கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த கெனோ (47) என்பவர் ஐயப்பனை அவதூறாக பேசி கத்தியால் குத்த பாய்ந்துள்ளார். அவர் விலகவே கத்தி ஐயப்பன் இடது காதை கிழித்து ரத்தம் சொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஐயப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு கெனோ அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். காயமடைந்த ஐயப்பனை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கெனோவை தேடி வருகின்றனர்.

The post இரணியல் அருகே பெயிண்டருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Iranial ,Ayyappan ,Nullivlai RC Street ,Dinakaran ,
× RELATED ஐயப்பனின் 8 அவதாரம்