
- 12 புயல் பாதுகாப்பு மையங்கள்
- வேட்டாரந்தய தாசில்தார் அலுவலகம்
- நாகப்பட்டினம்
- வேதராந்தியம் தாசில்தார்
- வேதரந்தியம் வருவாய் காலாண்டு
- புயல் பாதுகாப்பு மையங்கள்
- வெட்டரதி தாசில்தார் அலுவலகம்
நாகப்பட்டினம், செப்.28: வேதாரண்யம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை(29ம் தேதி) வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். வேதாரண்யம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆர்டிஓ தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. வேதாரண்யம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் நாளை (29ம் தேதி) காலை 10 மணிக்கு கலந்து கொண்டு தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை நகல், தற்போதைய புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் மனுவாக கொடுக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
The post 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.