பெங்களூரு: முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கடந்த 60 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். என்னால் பலர் நன்மை அடைந்துள்ளார்களே தவிர, என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருக்க முடியாது. என்னால் அரசியலில் வளர்த்து விடப்பட்டவர்கள், என் முதுகில் குத்தியபோதும் நான் அவர்களை பழிவாங்க நினைக்கவில்லை.
எனது மனசாட்சிப்படி நான் அரசியல் செய்து வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் பல ஏற்ற-தாழ்வுகள் கண்டுள்ளேன். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்தேன். பாஜவுடன் கூட்டணி அமைப்பதால், நாங்கள் அடிப்படை லட்சிய கொள்கையான மதசார்பின்மை கொள்கையை கைவிட மாட்டோம்’ என்றார்.
The post பாஜ கூட்டணியில் இணைந்தாலும் மதசார்பின்மை கொள்கையை எப்போதும் கைவிடமாட்டோம்: முன்னாள் பிரதமர் தேவகவுடா சொல்கிறார் appeared first on Dinakaran.