×

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; கர்நாடகா நாளை முழு அடைப்பு: 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு

பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் பருவமழை பொய்த்துவிட்டதால், தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசால் முறையாக திறந்துவிட முடியவில்லை. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அக்டோபர் 15 வரை விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

இதை கண்டித்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கன்னட திரையுலகினர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

The post தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; கர்நாடகா நாளை முழு அடைப்பு: 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Karnataka ,Bengaluru ,Kavieri ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கர்நாடக எதிர்க்கட்சி தலைவராக அசோக்...