×

திருப்பதிக்கு 15 நாள் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ‘‘சென்னை-திருப்பதி இடையில் ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரேணிகுண்டாவில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் செப்டம்பர் 28ம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 12 ம் தேதி வரை சென்னை – திருப்பதி – சென்னை ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் வண்டி எண் 16057, இன்று முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருப்பதியில் இருந்து மறுமார்கத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் வண்டி எண் 16054, இன்று முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு திருப்பதி செல்லும் வண்டி எண் 16053, இன்று முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்கத்தில் திருப்பதி இருந்து 18.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் வண்டி எண் 16058, இன்று முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் இருந்து 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்படும் வண்டி எண் 16204, இன்று முதல் அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் வண்டி எண் 16203, அக்.12 வரை 15 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

The post திருப்பதிக்கு 15 நாள் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Southern Railway ,Chennai ,Chennai- ,Tirupati ,Southern Railways ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...