×

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக மொழிபெயர்ப்பு நாள் விழா

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக மொழிபெயர்ப்பு நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலக மொழிபெயர்ப்பு நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் வரவேற்புரையாற்றிட, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் தலைமையுரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர்பேசியதாவது: உலகின் தலைசிறந்த படைப்புகளின் மொழியாக்கப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறுகிறது என்பதை 80 விழுக்காடு மக்கள் உணர்ந்துள்ளனர். மொழிபெயர்ப்புப் பணிகள் சரியான முறையில் நடைபெறுவதை ஆராய்வதற்கு ஆற்றல்சார் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

The post உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக மொழிபெயர்ப்பு நாள் விழா appeared first on Dinakaran.

Tags : World Translation Day ,World Tamil Research Institute ,Chennai ,Taramani ,World Translation Day Ceremony ,Dinakaran ,
× RELATED கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய...