×

தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: வேதமந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக்கொடி ஏற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அண்ணாமலை கோயிலில் உள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவ. 19 மாலை திருவண்ணாமலை மலை உச்சயில் மகாதீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் கூறியள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் தறஙபோது அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி விழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டு கோவிலின் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது.  இந்தாண்டு தீபத்திருவிழா இன்று காலை  கோவில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள  63 அடி உயர தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கொடியேற்று விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. …

The post தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: வேதமந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக்கொடி ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : D. Malai Annamalaiyar Temple Karthikai Deepatri Festival ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple Karthikai Deepatri Festival ,Annamalai temple ,. Malai Annamalaiyar Temple Kartikai Deepatri Festival ,Dinakaran ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...