×

துணைவேந்தர் தேடுதல் குழு தமிழ்நாடு கவர்னரின் தலையீட்டை கண்டிக்கிறோம்: முத்தரசன் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில உயர்கல்வி செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் இருந்து பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் ரத்தோரை நீக்கி அரசு இதழில் அறிவிப்பு வெளியிட்டார். தமிழ்நாடு கவர்னர், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெறக் கோரி உயர்கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். கவர்னரின் இத்தகைய போக்கு மாநில அரசின் உரிமைகளில் தேவையற்ற தலையீட்டை உள்நோக்கத்தோடு செய்கிறார் என்பதை உறுதி செய்கிறது. கவர்னரின் இத்தகைய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இப்பிரச்னையில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post துணைவேந்தர் தேடுதல் குழு தமிழ்நாடு கவர்னரின் தலையீட்டை கண்டிக்கிறோம்: முத்தரசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Vice-Chancellor Search Committee ,Tamil Nadu ,Mutharasan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,State ,Higher Education ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...