×

விஎச்பி முன்னாள் தலைவர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: செப்டம்பர் 11ம் தேதி சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விசிக முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மணியன் செப்டம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியனின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தபட்டார். அப்போது, இதுபோன்ற கருத்துகளை இனி வரும் காலங்களில் தெரிவிக்க மாட்டேன் என்று நீதிபதியிடம் மணியன் மன்னிப்பு கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மணியனின் நீதிமன்ற காவலை மீண்டும் அக்டோபர் 11ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

The post விஎச்பி முன்னாள் தலைவர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : VHP ,Chennai ,State Vishwa Hindu Parishad ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...