புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கடந்த 2015ம் ஆண்டு டெல்லி முதல்வராக பதவி ஏற்றார். அவர் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் ப்ளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்த இல்லத்தை புதுப்பிக்க அனுமதிக்கப்பட்ட ரூ.43.60 கோடி ரூபாய்க்கு மேல் ரூ.44.78 கோடியை கெஜ்ரிவால் செலவிட்டதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சிபிஐ எப்ஐஆரை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
The post கெஜ்ரிவாலின் வீடு புதுப்பிப்பு முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.
