×

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர், அவரது சகோதரரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர் கமலக்கண்ணன், அவரது சகோதரர் சிங்காரவேலனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருவரையும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மனு அளித்தனர். போலீஸ் தரப்பின் மனுவை விசாரித்த மதுரை நீதிமன்றம் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

The post நியோமேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர், அவரது சகோதரரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Neomax ,Chennai ,Kamalakannan ,Singaravelan ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் நிறுவனம் ₹5 ஆயிரம் கோடி மோசடி; பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது