×

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 10.11.2021 புதன்கிழமை காலை – 11.00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் நடபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா 03.12.2021 அன்று திருநெடுந்தாண்டகமும் , 04.12.2021 முதல் 13.12.2021 வரை பகல் பத்து திருவிழாக்களும், 13.12.2021 அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத் திருநாளான ஸ்ரீ நம்பெருமாள் இரத்தினங்கியுடன் பரமபத வாசல் திறப்பு 14.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 04.30 – 05.45 மணிக்குள்ளும் நடைபெறும். மேலும் 20.12.2021 ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும், 21.12.2021 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும், 23.12.20221அன்று தீர்த்தவாரியும், 24.12.2021 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்….

The post ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபம் appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi festival ,Aranganatha Swamy Temple ,Srirangam ,Tiruchi ,Srirangam Aranganatha Swamy Temple ,
× RELATED வீட்டில் பதுக்கிய யானை தந்தம் மான் தோலுடன் 4 பேர் கைது