×

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது. கோர்ட் ஆணையை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவு என்னவென்றே தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை ஏதோ அலுவலக உத்தரவு போல அதிகாரிகள் எண்ணுவதாக நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருக்கலாம்; அதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே நீதிமன்றங்களின் நோக்கம். குளித்தலையைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளருக்கு பணப்பலன், வாரிசு அடிப்படையில் பணி வழங்கக் கோரிக்கை வைத்தார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியபோது தனது கணவர் கருப்பையா உயிரிழந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Ikort Madurai branch ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...