×

தமிழ்நாடு பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை உடனே வெளியேற அழுத்தம் கொடுத்தது யார்?: காங். எம்.பி.ஜோதிமணி கேள்வி

சென்னை: தமிழ்நாடு பாஜக அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை உடனே வெளியேற அழுத்தம் கொடுத்தது யார்? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.  ஜோதிகுமார் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டுக்கு சென்றதும், சென்றவேகத்திலேயே திரும்பி வந்ததாக ஊடகத்தில் செய்தியாக வெளிவந்திருக்கிறது.

ஜோதிகுமார் வீட்டில் நடந்த சோதனையின் காரணம் என்ன? மணல் வியாபாரிகளிடம் இருந்து மாதம் ரூ.50 லட்சம் ஜோதிகுமார் பெயரில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது உண்மையா? அதுதொடர்பாக விசாரிக்கத்தான் அமலாக்கத்துறை அவர் வீட்டுக்குச் சென்றதா? என சாடினார்.

மேலும், ரூ.50 லட்சம் பணத்தை ஜோதிகுமார் பெற்றதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்புள்ளதா? அண்ணாமலைக்கு தொடர்பு இல்லையென்றால் ஏன் அமலாக்கத்துறை போன வேகத்திலேயே திரும்பி வர வேண்டும்? அமலாக்கதுறையை பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை ஜோதிமணி எழுப்பியுள்ளார்.

The post தமிழ்நாடு பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை உடனே வெளியேற அழுத்தம் கொடுத்தது யார்?: காங். எம்.பி.ஜோதிமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,BJP ,Congress ,MP Jyotimani ,Chennai ,Jyothikumar ,Jyotimani ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...