×

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் அருங்காட்சியகத்தைக் காண ஆர்வம் காட்டும் மாணவர்கள்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் அருங்காட்சியகத்தைக் காண பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சைட் மியூசியம் என்பது இந்தியாவில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போது ‘பி’ சைட்டில் கண்ணாடி மூலம் உள்ளது உள்ளபடியே தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் அதன் மீது கண்ணாடி பேழைகள் அமைத்து அதன் வழியாக பொருள்களை பயணிகள் பார்க்கும் வண்ணம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளே விளக்குகள் பொறுத்தப்பட்டு பார்க்கும் பார்வையாளர்களுக்கு முதுமக்கள் தாழிகள், அதனுள் கிடைத்த பொருள்கள் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சைட் மியூசியத்தினை சுற்றி பூங்கா மற்றும் புகைப்பட காட்சி அமைத்து உள்ளே வரும் தொல்லியல் ஆர்வலர்களை திருப்திபடுத்தும் வண்ணம் அமைத்து வருகிறோம் என்று கூறினார். எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே காட்சிப்படுத்தும் சைட் தொழில்நுட்பத்தை கொண்டு ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட வரும் பள்ளி கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் அருங்காட்சி பற்றிய ஐயங்களை எழுத்தாளரிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.

The post தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் அருங்காட்சியகத்தைக் காண ஆர்வம் காட்டும் மாணவர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Adichanallur, Thoothukudi district ,Adichanallur ,Thoothukudi district ,Sight Museum ,Dinakaran ,
× RELATED மூச்சுத்திணறலால் நடிகர் திடீர் மரணம்