×

யாருக்கு என்ன கலர் என்பதை கணினியே தேர்வு செய்கிறது கைத்தறி நெசவாளர் உற்பத்தி நிறுவனம் தரம் உயர்வு

*அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி : யாருக்கு என்ன கலர் துணி என்பதை கணினி தேர்வு செய்கிறது. அந்த அளவுக்கு தமிழக கைத்தறி நெசவாளர் உற்பத்தி நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோஆப் டெக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு விற்பனையை நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2022ம் ஆண்டு 1 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 3 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்பது செயல்படுத்தப்பட்டு 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

மேலும் கைத்தறி நெசவாளர் துறை தற்போது நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. யாருக்கு எந்த கலர் சரியாக இருக்கும் என்பதை கணினி முன் நின்றால் அது நம்மை ஸ்கேன் செய்து, அதுவே நமக்கான கலரை தேர்வு செய்து கொடுக்கும் அளவிற்கு தமிழக கைத்தறி நெசவாளர் உற்பத்தி நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு ஆயிரம் விதமான ரகங்களிலும் வண்ணங்களிலும் தயாரித்து கொடுக்கும் அளவிற்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் வாங்க விரும்பும் துணி வகைகளை கோ-ஆப் டெக்ஸில் வாங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரவிக்குமார், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் ஐயப்பன், மண்டல மேலாளர் அம்சவேணி, திருச்சி பொதிகை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் மற்றும் அப்துல் ரகுமான். அரசு அலுவலர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post யாருக்கு என்ன கலர் என்பதை கணினியே தேர்வு செய்கிறது கைத்தறி நெசவாளர் உற்பத்தி நிறுவனம் தரம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Handloom Weaver ,Minister ,KN Nehru Information ,Trichy ,Handloom Weaver Manufacturing Company ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...