×

ஏலுரில் குடும்ப பிரச்னை காரணமாக தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி

*உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீசார்

திருமலை : ஏலுரில் குடும்ப பிரச்னை காரணமாக தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதியை போலீசார் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர். ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

இதனால் மனவேதனையடைந்த ராேஜஷ் அவரது மனைவி நிர்மலாவை அழைத்து கொண்டு ரயில் முன் பாயந்து தற்கொலை செய்து கொள்ள வட்லூர் ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராேஜஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ராேஜஷ் கையில் வைத்திருந்த பிளேடை கொண்டு யாரும் அருகே வரவேண்டாம் என கூறி நிர்மலாவின் கைகளை அறுத்து யாரும் சத்தம் போட்டார். இதனால் நிர்மலாவின் கையில் ரத்த கொட்டியது.

அப்போது, போலீசார் துணிந்து ‘வேண்டாம் தம்பி எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் சொல் நாங்கள் அதனை தீர்த்து வைக்கிறோம் உனக்கு 3 குழந்தைகள் உள்ளனர்’ என மன்றாடினர். ஆனால் ராஜேஷ் அதனை கேட்காமல் நிர்மலாவை அழைத்துக் கொண்டு தண்டவாளத்தில் தற்கொலைக்கு ரயில் வரும் திசை நோக்கி சென்றார். ரயிலுக்கான சிக்னலும் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் உயிரை பணயம் வைத்து இருவரையும் துரத்தி சென்று ராஜேஷிடம் இருந்து பிளேடை பறித்து நிர்மலாவை மீட்டனர்.

அதன் பிறகு அவரை பிடித்து அடுத்த தண்டவாளத்திற்கு தூக்கி வந்தனர். இருவரும் மீட்கப்பட்ட சில நொடிகளிலேயே ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து தம்பதியை காப்பாற்றிய போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post ஏலுரில் குடும்ப பிரச்னை காரணமாக தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி appeared first on Dinakaran.

Tags : Elur ,Thirumalai ,
× RELATED `மார்க் லிஸ்ட்’ வாங்க பள்ளிக்கு...