×

2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக “2018” மலையாள திரைப்படத்தை பரிந்துரை செய்தது இந்தியா..!!

டெல்லி: 2018 என்ற மலையாள திரைப்படம், 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், 2018 என்ற மலையாள திரைப்படம், 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிட்டிருந்தது.

கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையும் பெற்றது. 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 2018. அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் 2018 திரைப்படம் போட்டியிடும்.

The post 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக “2018” மலையாள திரைப்படத்தை பரிந்துரை செய்தது இந்தியா..!! appeared first on Dinakaran.

Tags : India ,Oscars for ,Delhi ,Oscars ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...