×

மாக்கினாம்பட்டி கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு

*ஊராட்சியின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பிரதான குழாய் மூலமாக நகராட்சி மற்றும் கிராமபுறங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு செல்கிறது. இதற்காக, ஆங்காங்கே நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு தண்ணீர் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜமீன்கோட்டம்பட்டி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் உள்ளன. இந்த கிராமங்களுக்கு தண்ணீர் விரைந்து செல்வதற்காக மாக்கினாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு பகுதியில் உள்ள நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பெரிய அளவிலான குழாய் வழியாக, அந்தந்த கிராம பகுதி மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் ெகாண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம், மாக்கினாம்பட்டி கிராமத்தின் மையப்பகுதி வழியாகசெல்லும் கூட்டுக்குடிநீர் குழாயானது, தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் திடீர் என உடைந்தது. இதனால், ரோட்டை பிரித்து கொண்டு, தண்ணீர் பீரிட்டு வெளியேறியது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி ஆறுபோல் ஓடியது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நீரேற்று நிலையத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும், உடைபட்ட குழாய் பகுதியை கண்டறிந்து சீர்படுத்த மாக்கினாம்பட்டி ஊராட்சி துணை தலைவர் கிரிராஜ் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். பின், பொக்லைன் இயந்திரம் கொண்ட குழாய் உடைப்பை கண்றியும் பணியில், ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது, பெரிய அளவில் குழாய் உடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைந்த இடம் தோண்டப்பட்டு அங்கு சேதமடைந்த பெரிய அளவிலான குழாயை மாற்றி புதிய பிவிசி குழாய் சீரமைத்தனர். அப்பணி முழுழமையாக நிறைவு பெற்றதையடுத்து, வாகன போக்குவரத்துக்கு ஏதுவாக சமப்படுத்தப்பட்டது. பின், அந்த குழாய் வழியாக நீரோற்று நிலையத்திலிருந்து தண்ணீர் திறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாக்கினாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் துரித நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டினர்.

The post மாக்கினாம்பட்டி கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Mackinampati Village CollectiveWater ,Pollachi ,Poulachi ,Village CollectiveWater ,Dinakaran ,
× RELATED நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்