×

வேலூர் தொரப்பாடியில் ₹6.50 கோடி நிதி ஒதுக்கீடு சேறும், சகதியுமான சாலைகளை 15 நாட்களில் சீரமைக்க வேண்டும்

*ஆய்வு செய்த எம்எல்ஏ, மேயர் உத்தரவு

வேலூர் : வேலூர் தொரப்பாடியில் ₹6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சேறும் சகதியுமான சாலைகளை 15 நாட்களில் சீரமைக்க வேண்டும் என்று ஆய்வு செய்த எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.வேலூர் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் அந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் கே.கே.நகர் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த பகுதிகளில் அடுத்த 15 நாட்களுக்குள் சாலை அமைக்க வேண்டும். அதன்பின்னரே மற்ற இடங்களில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையின்றி அனைத்து இடங்களிலும் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும். பணிகள் முடிந்த இடத்தில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக எம்எல்ஏ மற்றும் மேயர் கூறுகையில், ‘பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த இடங்களில் சாலைகள் அமைக்க ₹6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தொரப்பாடி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் உடனுக்குடன் சாலை அமைக்கவும், இப்பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர்.ஆய்வின்போது உதவி கமிஷனர் சுப்பையா, மாநகராட்சி செயற்பொறியாளர் பார்வதி, மாநகர நல அலுவலர் முருகன், கட்டிட ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post வேலூர் தொரப்பாடியில் ₹6.50 கோடி நிதி ஒதுக்கீடு சேறும், சகதியுமான சாலைகளை 15 நாட்களில் சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vellore Torpadi ,MLA ,Vellore ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் 300...