×

திருவண்ணாமலையில் தொடர் மழையால் அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் பிரம்மதேவன் சிற்பம் உடைந்து விழுந்தது

*விரைவில் சீரமைக்க நடவடிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தொடர் கனமழையால் அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் அமைந்துள்ள சிறிய அளவிலான பிரம்மதேவன் சிமெண்ட் சிற்பம் சிதைந்து விழுந்தது. அதனை விரைவில் சீரைமைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நேற்று முன்தினம் இரவு 96 மிமீ மழை பதிவானது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் தொடரும் கனமழையால், அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரம் என அழைக்கப்படும் அம்மணி அம்மன் கோபுரத்தின் முதல் அங்கணத்தில், வடதுபுறம் சுமார் 3 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரம்மதேவன் சிற்பத்தின் ஒரு பகுதி சிதைந்து கீழே விழுந்தது. கடந்த கும்பாபிஷேகத்தின் போது இந்த சிலை சுண்ணாம்பு கலவை மற்றும் சிமெண்ட்டால் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

தொடர் மழையால் இந்த சிற்பத்தின் இடையே தண்ணீர் தேங்கியிருந்தது. எனவே, சிற்பம் சிதைந்து விழுந்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி ஆகியோர் சிற்பம் சிதைந்து விழுந்த இடத்தை பார்வையிட்டனர். \தீபத்திருவிழாவுக்கு கோயில் கோபுரங்களில் உள்ள செடிகள் அகற்றி சீரமைக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது, சிதைந்துள்ள சிற்பத்தை முழுமையாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மழையால் கோபுரத்தின் வேறு பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து, அவற்றையும் முன்கூட்டியே சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

The post திருவண்ணாமலையில் தொடர் மழையால் அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் பிரம்மதேவன் சிற்பம் உடைந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Brahma Deva ,Annamalaiyar temple ,Brahma Devan ,Brahmadevan ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...