×

புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க மலையேற குவியும் பக்தர்கள்!!

விருதுநகர்: புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற பக்தர்கள் குவிந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் வளர்பிறை பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 30 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் நான்கு நாட்களும் சதுரகிரிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

The post புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க மலையேற குவியும் பக்தர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Sundaramakalinga ,Swami ,Puratasi Varapirai Pradosha ,Virudhunagar ,Chaturagiri ,Western Ghats ,Puratasi Varapira Pradosha ,
× RELATED பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம்